தனது குஞ்சுகளிடம் ஆங்கிலத்தில் கதைத்து அசத்தும் கிளி... சலிக்காத சுவாரசியமான காணொளி
ஒருவர் ஒரே விசயத்தை திரும்ப, திரும்பப் பேசினால் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என கிராமத்தில் பழமொழி சொல்வதைக் கேட்டிருப்போம். அப்படி சொல்வதுபோலவே கிளி நன்றாக பேசக் கூடியது. மனிதனையும், பிற உயிரினங்களையும் வேறுபடுத்திக் காட்டுவதே நம் பேச்சுத்திறன் தான். அந்த வகையில் மனிதர்களுக்கு இணையாக கிளிகளும் முறையான பயிற்சி எடுத்துக் கொண்டால் பேசக் கூடியவைதான்.
கிளிகளைப் பொறுத்தவரை நாம் ஒரு விசயத்தை சொல்லிக்கொடுத்தால் ஞாபகமாக வைத்திருக்கும். அப்படியே சொல்லியும் காட்டும். அந்தவகையில் கிளி மனிதர்களோடு மிகவும் நெருக்கமாக வாழும் பிராணி ஆகும். இங்கு தனது எஜமானர்களிடம் பேச்சுத்திறமையைக் கற்றுக்கொண்ட கிளி ஒன்று நுனி நாக்கு ஆங்கிலத்தில் புதிதாக பிறந்த தன் குட்டிகளிடம் பேசுகிறது.
இந்த உலகிற்கு வந்திருக்கும் தன் குட்டிகளை நோக்கி, ‘ஐ லவ் யூ பேபீஸ், குட் மார்னிங்…என்றெல்லாம் சொல்லும் கிளி..கடைசியில் கிஸ் யூ என்றவாறே தன் குட்டிகளுக்கு முத்தமிடுகிறது. இங்கிலீஸில் கிளி அழகாகப் பேசும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.