அடம் பிடித்த குழந்தை! அப்பாவை அடித்து பாடம் புகட்டிய தாய்: இணையவாசிகளை மிரள வைத்த காட்சி
அப்பாவை அம்மாவிடம் அடி வாங்க வைத்த பின்னர் எழுந்து அம்மாவுடன் ஓடிய குழந்தையின் வீடியோக்காட்சி இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.
குழந்தைகளின் சேட்டைகள்
பொதுவாக பெற்றோர்கள் கடைக்குச் சென்றால் குழந்தைகளை அழைத்துச் செல்லமாட்டார்கள். காரணம் என்ன தெரியுமா? அவர்கள் பார்ப்பது எல்லாவற்றையும் வாங்கி கேட்பார்கள்.
சிலர் குறிப்பிட்ட பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே பணம் வைத்திருப்பார்கள், ஆனால் குழந்தைகள் நினைத்தப் பொருளை வாங்கி கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.
சிலர் வாங்கி கொடுப்பார்கள் இன்னும் சிலர் வாங்க தருகிறேன் என்று சமாதானம் செய்து அழைத்து வருவார்கள். நாம் நினைக்கும் பொருளை வாங்குவதற்காக குழந்தைகள் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் அடம்பிடிக்க தயாராக இருப்பார்கள்.
குழந்தையை அம்மாவுக்கு வந்த யோசனை
இதன்படி, சூப்பர் மார்க்கட் ஒன்றில் குழந்தையொன்று ஏதோவொன்றை பார்த்து அது வேண்டும் என அடம்பிடித்து கொண்டு தரையில் படுத்துக் கொள்கிறது.
இதனால் அம்மா தன்னுடைய கணவரை குழந்தையின் பக்கத்தில் தரையில் படுக்குமாறு கூறுகிறார். இதனை கேட்ட கணவரும் குழந்தையின் பக்கத்தில் படுத்து கொள்கிறார். அப்போது அம்மா பளாரென கணவரின் கன்னத்தில் அம்மா அறைந்துள்ளார்.
இதனை பார்த்த குழந்தை எழும்பி அம்மாவின் கையை பிடித்துக் கொண்டு செல்கிறது. இந்த காட்சியை பார்க்கும் குழந்தையை எழுப்ப அம்மா பயன்படுத்தும் நுட்பம் வியப்பாக இருந்தது.
இதன்போது எடுக்கப்பட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த நெட்டிசன்கள், “ குழந்ழையை எழுப்ப அம்மாவின் யோசனை வியக்கதக்கது” என கருத்துக்களை பதிவிட்டுள்ளார்கள்.
That's Right 😂😂😂😂 pic.twitter.com/O204Y9K2QT
— Janvi 🌻💚 (@janugirl7061) February 16, 2023