பிறந்த கைக்குழந்தையை எப்படியெல்லாம் பார்த்துக்கொள்ளவேண்டும்?
குழந்தைகளை பொறுத்தவரை அவர்களுக்கு 6 மாதம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதேப்போல், அம்மா சாப்பிடும் உணவுகள் செரிமானமாகா விட்டால், அது குழந்தையையும் பாதிக்கும்.
எனவே, குழந்தைக்கு திட உணவு கொடுக்கும் வரை அம்மா மற்றும் குழந்தை சாப்பிடும் உணவு இருவருக்கும் ஆரோக்கியமானதாகவும், எந்தவித பிரச்சனையும் ஏற்படுத்தாது என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும், கைக்குழந்தையைப் பொறுத்தவரை சரியான நேரத்தில் சிறுநீர் கழிக்கிறதா மற்றும் மலம் கழிக்கிறதா என்பதை கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
உங்கள் குழந்தைக்கு பசும்பாலில் இருக்கும் புரதத்தால் அலர்ஜி ஏற்படுகிறது என்றால் அதை நீங்கள் பின்வரும் அறிகுறிகள் வைத்து எளிதாக கண்டறியலாம்.
தூங்கும் முன்பு இந்த 3 பொருட்களை சாப்பிடவே கூடாதாம்! தூங்கவே மாட்டீங்க
குழந்தை எப்பொழுதுமே எரிச்சலான மனநிலையில் சிணுங்கிக்கொண்டே இருக்கும் வயிற்று வலி மற்றும் வயிறு உப்பசம் காணப்படும். வாந்தி எடுக்கும் அடிவயிறு பஞ்சு போல இருக்கும் மற்றும் ராஷஸ் தோன்றும்., ஒரு நாளைக்கு அதிக முறை கழிவு வெளியேறும்.
மலம் வெளியேறும்போது அதில் ரத்தக் கசிவு ஏற்படலாம். டயாப்பரில் கழிவு திரவமாக அல்லது சளி போன்று காணப்படும்.
தாய்ப்பால் கொடுக்கும் அம்மாவும் பால் சம்பந்தப்பட்ட உணவுகளை அதாவது பால், தயிர், ஐஸ்க்ரீம், வெண்ணை என்று அனைத்தையுமே சிறிது காலம் வரை தவிர்க்க வேண்டும்.
பெரும்பாலான குழந்தைகளுக்கு ஐந்து வயது ஆன பின்பு இந்த அலர்ஜி தானாகவே மறைந்துவிடும்.