தமிழனின் பெருமை சொல்லும் பறையாட்டம்! வெளிநாட்டு பெண்ணின் தேடல்கள்!
பொதுவாக தமிழர்களின் பழக்கவழக்கங்கள், கலாச்சாரமுறைகள், பராம்பரியங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் என்பனவற்றை ஒப்பிட்டு பார்த்தால் வேறுபட்டவையாகவே காணப்படும்.
இவர்களின் ஒவ்வொறு அசைவிற்கும் ஒவ்வொரு அர்த்தம் மற்றும் விஞ்ஞான ரீதியிலான விளக்கம் இருக்கும். இத்தகைய பெருமையாவும் தமிழர்களையே சாரும்.
அந்த வகையில் தமிழர்களின் பராம்பரிய ஆட்டங்களில் ஒன்றான பறையாட்டம் குறித்து தெரிந்துக்கொள்வோம்.
பறை ஆட்டம் அல்லது தப்பாட்டம் என்பது தமிழர்களின் பாரம்பரியமான நடனங்களில் ஒன்று. இது உணர்ச்சி மிக்கது, அதில் எழும் பறையின் ஓசைக்கேற்ப கிளர்ந்தெழும் உடல் அசைவுகளைக் கொண்டது எனலாம்.
இந்த பறையாட்டம் திருமணம், இறப்பு, தெய்வ திருவிழா நிகழ்வுகள் என மக்களின் அன்றாட வாழ்க்கையினுடன் தொடர்புபட்டு காணப்படும். இதன்படி பறையாட்டத்தின் மகத்துவம் குறித்து கீழுள்ள வீடியோவை முழுமையான பார்ப்பதன் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
