பெண்ணின் மூளையில் 8 செ.மீ அளவில் புழு... எப்படி சென்றது தெரியுமா?
பெண் ஒருவரின் மூளையில் உயிருடன் புழு கண்டறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூளையில் உயிருடன் புழு
ஆஸ்திரேலியா, சிட்னியைச் சேர்ந்தவர் 64 வயது பெண் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு நிமோனியா, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, வறட்டு இருமல், காய்ச்சல், இரவில் வியர்வை, மனச்சோர்வு மற்றும் நினைவாற்றல் குறைபாடு என இவற்றின் அறிகுறிகள் இருந்துள்ளது.
இதற்காக சுமார் 2 ஆண்டுகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2022ம் ஆண்டு எடுக்கப்பட்ட எம்,ஆர்,ஐ ஸ்கேனில் பார்த்த போது மூளையில் ஏதோ ஒன்று இருப்பது தெரியவந்துள்ளது.
அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர். சிவப்பு நிறத்தில் 8 சென்டி மீட்டர் நீளமுள்ள புழு ஒன்றினை கண்டறிந்துள்ளார். இவை அறிவியல் ரீதியாக `ஓபிடாஸ்காரிஸ் ராபர்ட்ஸி' எனறு அழைக்கப்படுகிறது.
மலைப்பாம்புடன் தொடர்புடைய புழு
இந்த புழுவானது ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, பப்புவா நியூ கினியா போன்ற பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்ட மலைப்பாம்புகளுடன் தொடர்புடையதாகவும் குறித்த பெண் பாம்புகள் நிறைந்த ஏரிக்கு அருகே வசித்து வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் சமைப்பதற்கு எடுக்கப்பட்ட நியூசிலாந்து நாட்டு கீரை உணவில் குறித்த புழுவின் முட்டை இருந்ததை கவனக்குறைவால் உட்கொண்டுள்ளார்.
இவை உடம்பிற்குள் சென்று எப்படியோ மூளையில் தனது வளர்ச்சியை ஆரம்பித்து 8 செ.மீ அளவில் வளர்ந்துள்ளது. மேலும் மருத்துவ வரலாற்றில் மனித மூளையில் புழு கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதன்முறை என்றும் எதிர்காலத்தில் இது போன்ற நோய் தொற்றுகள் நிகழலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |