தினமும் பப்பாளி ஜூஸ் குடித்து வந்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்?
பப்பாளி சாப்பிடுவது எப்போதும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.
இதில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் (Vitamins and Fibre) போன்ற பல சத்துக்கள் உள்ளன. செரிமானம், உடல் எடை அதிகரிப்பு, சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து என்று கூறப்படுகிறது.
இந்த பழத்தில் கருப்பு ஜெலட்டினஸ் விதைகள் உள்ளன. இது தவிர, பப்பாளிப் பழத்தின் மென்மையான, உண்ணக்கூடிய ஆரஞ்சு சதை மிகவும் சத்தானதாகும். இது பலவிதமான சுகாதார நலன்களை நமக்கு வழங்குகிறது.
தினமும் பப்பாளி ஜூஸ் குடித்தால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்
நரம்புத் தளர்ச்சி
தினமும் பப்பாளி ஜூஸ் குடித்து வந்தால், நரம்புத்தளர்ச்சி பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும், மேலும், பப்பாளிப் பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டு வரலாம். தேனில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் நல்ல பலனை விரைவில் கொடுக்கும்.
உடல் எடை குறைய
தினமும் பப்பாளி ஜூஸ் குடித்து வந்தால், உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு எடையை குறைக்கக் செய்யும்.
மேலும், பப்பாளியில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் மற்றும் பொட்டாசியம் நம்முடைய உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்க உதவி செய்யும்.
நோய் எதிர்ப்பு சக்திக்கு
தினமும் பப்பாளி ஜூஸ் குடித்து வந்தால், நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கும். பப்பாளி ரத்தில் நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரித்து, நோய் தொற்று ஏற்படுவதை கட்டுப்படுத்தும்.
முகம் பளபளப்புக்கு
தினமும் பப்பாளி ஜூஸ் குடித்து வந்தால், முகத்தில் சுருக்கம் நீங்கி முகம் பளபளப்புடன் அழகாக மாறும்.
சர்க்கரை வியாதி
தினமும் பப்பாளி ஜூஸ் குடித்து வந்தால், சர்க்கரை, நீரிழிவு பிரச்சனையை குணமாக்கும். இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைப்பதோடு, அவர்களின் உடல் சோர்வை குறைத்து விடும்.
கண் ஆரோக்கியத்திற்கு
தினமும் பப்பாளி ஜூஸ் குடித்து வந்தால், பப்பாளியில் உள்ள கரோடினாயிட்ஸ் மிகவும் சிறப்பான சக்தி வாய்ந்த பொருட்கள். எனவே, இவை கண்கள் மற்றும் சருமத்திற்கு நன்மையை பயக்கும்.