அவசரத்துக்கு உதவும் Panic Mode பற்றி உங்களுக்கு தெரியுமா? எப்படி ON செய்வது
இன்றைய அவசர கால உலகில் ஏதேனும் ஆபத்து நேர்ந்தாலோ, கஷ்டமான சூழலிலோ நண்பர்களையோ, குடும்ப உறுப்பினர்களையோ தொடர்பு கொள்ள நினைப்போம்.
இந்த மாதிரியான சூழலில் உங்களுக்கு உதவும் Panic Mode பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இந்த பதிவில் சாம்சங் மொபைல்களில் மறைந்திருக்கும் இந்த அம்சத்தை எப்படி ஆன் செய்வது?
வழிமுறைகள்
* முதலில் சாம்சங் போனில் Settings-க்குள் நுழைந்து கொள்ளுங்கள்.
* Advance feature என்பதை செலக்ட் செய்து கொண்டு, Panic Mode என்ற ஆப்ஷனை தேடிக்கொள்ளுங்கள்.
* அதில் Send SOS messages என்று கொடுக்கவும், இதனை ஆன் செய்து கொள்ளவும்.
* ஆபத்தான நேரங்களில் பயன்படும்படி, இதற்கு தேவையான Permissions களை வழங்கவும்.
* தொடர்ந்து Emergency Contacts களை சேர்த்துக்கொள்ளவும், அவ்வளவு தான்.
எப்படி செயல்படுகிறது?
Panic Mode-யை ஆன் செய்த பின்னர், மூன்று முறை Power Buttonயை அழுத்தினால் 112 என்ற நம்பருக்கு போன் அழைப்பு விடுக்கப்படும், உடனடியாக Emergency Contactsல் நீங்கள் கொடுத்துள்ள எண்களுக்கு அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் அனுப்பப்படும்.
இதுமட்டுமல்லாது புகைப்படங்களுடன் மெசேஜ் அனுப்பும் வசதி இருப்பதால், எந்த மாதிரியான சூழலில் இருக்கிறீர்கள் என்பதை தெளிவாக புரியவைக்கவும் முடியும்.
இந்த வசதி பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்காக உருவாக்கப்பட்டதே, ஆபத்து வரும் போது பெண்கள் மிக எளிதாக தங்களது உறவினர்களை, நண்பர்களை தொடர்பு கொள்ள முடியும்.
2017ம் ஆண்டு முதலே இந்த வசதி சாம்சங் போன்களில் இருப்பது குறிப்பிடத்தக்கது.