Panic attack symptoms: பேரச்ச தாக்கை எவ்வாறு கட்டுப்படுத்துவது? முழுமையான விளக்கம்
பொதுவாகவே மனிதர்கள் பார்ப்பதற்கு சாதாரணமாக தோற்றமளித்தாலும் ஒவ்வொரு தனி நபர்களுக்குள்ளும் ஒவ்வொரு பிரச்சினைகள் மற்றும் வித்தியாசங்கள் இருக்கும்.
அப்படி குறிப்பிட்ட சிலரை பார்ப்பதற்கு கம்பீரமான தோற்றத்தில் மற்றவர்களை அச்சப்படுத்தும் வகையில் இருப்பவர்களும் கூட ஏதோ ஒரு விடயத்துக்கு அதிகம் பயம் கொண்டவராக இருக்கலாம்.
அப்படி வயது வித்தியாசம் இன்றி மனிதர்களில் ஏற்படும் ஒரு பாதிப்பு தான் பேனிக் அட்டேக் (panic attack).
panic attack என்றால் என்ன? அதன் தாக்கம் எப்படியிருக்கும் மற்றும் இதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்த முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
Panic Attack என்றால் என்ன?
பேரச்ச தாக்கம் என்பது திடீர் பயம், அதிக உணர்வுகள் மற்றும் இயல்பான, சாதாரண மற்றும் அச்சுறுத்தாத சூழ்நிலைகளுக்கு வலுவான எதிர்வினைகளை ஏற்படுத்துக்கின்ற ஒரு நிலையை குறிக்கும்.
ஒரு நபருக்கு உச்சகட்ட பயத்தை ஏற்படுத்தும் சூழ்நிலையின் போது நிறைய வியர்வை மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம் மற்றும் அவர்கள் மாரடைப்பு வருவதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும் அல்லது அதை அனுபவிக்கும் நபருக்கு பைத்தியம் பிடிப்பதை போல் தோன்றும் இப்படி அதிகபட்ச பயத்தால் குறிப்பிட்ட நிமிடங்களுக்கு உடலில் ஏற்படுகின்ற மாற்றம் Panic Attack ஆகும்.
பாதிப்பின் அறிகுறிகள்
குறித்த பாதிப்புக்கு உள்ளாகும் அனைவரும் ஒரே மாதிரியான அறிகுறிகளை அல்லது விளைவுகளை அனுபவிப்பது கிடையாது. இது நபருக்கு நபர் வேறுபடும்.
பேரச்ச தாக்கத்தின் போது பொதுவாக ஏற்படும் சில அறிகுறிகளாக இதயம் வேகமாக துடிப்பது, வியர்த்து கொட்டுவது, கை கால் நடுக்கம், குமட்டல், வயிற்றில் அசௌகரியம் ஏற்படுவது, தலைச்சுற்றல், தலைவலி, மார்பு வலி, மூச்சுத் திணறல் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பாதிப்பை உணர்கின்றார்கள்.
இவ்வாறு திடீர் என ஏற்படும் பாதிப்பு மூளையில் ஒருவித எச்சரிக்கை உணர்வை ஏற்டுத்துவதற்காகவே இருக்கும். உளவியல் மற்றும் உடலியல் ரீதியில் இயல்புக்கு மாறாக ஏதோ நடக்கின்றது என மூளைக்கு தகவல் வழங்கப்படும் போதே பேரச்ச தாக்கம் ஏற்படுகின்றது.
உளவியல் ரீதியில் பார்க்கும் போது, ஓர் உயிர் அது பிழைப்பதற்காக நடத்தும் வாழ்வியல் போராட்டமாகவே இது பார்க்கப்படுகின்றது.
மருத்துவ கண்ணோட்டத்தில் பார்த்ததால், கார்டிசோல், அட்ரனலின், நோராட்ரனலின் போன்ற சுரப்பிகள் பேர்ச்ச தாக்கம் ஏற்படும் போது முடக்கப்படுகின்றது.
இந்த நிகழ்வு அறிவாற்றல் பற்றாக்குறையுடன் தொடர்புடையது. இந்த பாதிப்பின்போது ஒருவரின் கவனம், நினைவு(working memory), செயல்திறன் போன்ற செயல்பாடுகள் சில நிமிடங்களுக்கு ஸ்தம்பிதம் அடையும்.
இதனால் குழப்பம் மற்றும் "தன்னிலை மறப்பது" போன்ற மோசமான மற்றும் அபாயகரமான விளைவுகளை இந்த பேனிக் அட்டேக் ஏற்படுத்தும்.
எல்லா வயதினரும் பீதி தாக்குதல்களை அனுபவிக்கலாம். இருப்பினும், பீதி தாக்குதல்கள் அதிகமாக வயது முதிர்ந்தவர்கள் மத்தியில் தான் அதிகம் ஏற்படுகின்றது.
பேரச்சத் தாக்கத்துக்கு உள்ளாகும் போது தான் பைத்தியமாகி வருவதாகவும், இறக்கப் போவதாகவும் அல்லது ஏதோ ஒன்று தன்னை அச்சுறுத்துவது போன்ற உணர்வு ஏற்படுகின்றது.
மனிதர்களை மற்ற உயிரினங்களிடமிருந்து பாகுப்படுத்தும் முக்கிய விடயமான சிந்தனையாற்றல் அமைகின்றது இதனை தான் பகுத்தறிவு என்கின்றோம். ஆனால் அதீத கற்பனை ஆற்றல் இருக்கும் போதுதான் பேரச்ச தாக்கம் ஏற்படுகின்றது.
ஒப்பீட்டளவில் ஆண்கள் மற்றும் பெண்களிடையே, ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகின்றதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.
பெண்களுடன் தொடர்புடைய ஹார்மோன் சுழற்சி முறைகளில் இதற்கான விளக்கம் கொடுக்கப்படுகின்றது மாதவிடாய் நிற்கும்போது வயதை எட்டும் போது பேரச்ச தாக்கம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றது.
பிடிவாதமும் இதற்கு காரணமாகிறது. சிறிய விஷயங்களுக்கு கூட கோபப்படும் நபர்கள், மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேரச்சத் தாக்கம் ஏற்டும் வாய்ப்பு அதிகம்.
ஒரு குறிப்பிட்ட மரபணு காரணங்களினாலும் மன அழுத்தம் காரணமாகவும் பேரச்ச தாக்கம் ஏற்படலாடம். இதனை முழுமையாக தடுக்க முடியாது.
ஆனால் ஒரு தடவை இதனை அனுபவித்தவர்கள் இது குறித்து முழுமையாக அறிந்து வைத்திருப்பதன் மூலம் இன்னொரு தடவை இந்த உணர்வு ஏற்படும் போது எப்படி கையாளுவது என்பது குறித்து எச்சரிக்கையாக இருக்கலாம்.
முறையான உளவியல் சிகிச்சை, மருந்துகளை எடுத்துக்கொள்வதன் மூலமும் பேரச்ச தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |