அட பாவிகளா... சிறுநீரை கலந்து பானிபூரியை விற்ற நபர்; வெளியான வீடியோவால் அதிர்ச்சி!
நபர் ஒருவர் சிறுநீரை கலந்து பானிபூரியை விற்ற வீடியோ காட்சியானது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய வாழ்க்கை முறையில், பலரும் சுத்தமான உணவு, சுகாதாரமான வாழக்கையை வாழ்ந்தாலும் கூட பெயர் தெரியாத பல வியாதிகள் பலரை தாக்குகின்றது.
நாம் உண்ணும் உணவு தான் நமக்கு தேவையான பல சக்திகளை தருகின்றது. எனவே உண்ணும் உணவில் அனைவரும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.
அதிலும், சத்தான கலப்படம் இல்லாத உணவுகளை சாப்பிடுவது பெரிய விஷயமாகவே உள்ளது. அந்த வகையில், அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஒரு அருவருப்பான சம்பவம் நடந்துள்ளது.
அப்பகுதியில், சாலையோரத்தில் உள்ள தள்ளுவண்டி கடையில் பானிப்பூரி விற்கும் நபர் ஒருவர் வேலை செய்து கொண்டே பிளாஸ்டிக் குவளையில் சிறுநீர் கழித்து அதை பானிபூரி தொழிலுக்கு பயன்படுத்தும் நீரில் கலக்கிறார்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சாலையோர கடைகளில் உணவு உன்பவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Shocking!A street vendor(pani puri saller) has been arrestd in Guwahati after viral a sensational video in which he mixed his urine with water and using the same Water in Pani Puri.#ViralVideo #Guwahati @ABPNews @ANI @the_viralvideos @ViralPosts5 @indiatvnews @TheQuint @SkyNews pic.twitter.com/ncekjhMeh1
— Mamun Khan (@Mk817Khan) August 20, 2021