தங்க பானி பூரி சாப்பிட்டுள்ளீர்களா? சாப்பிட்டவர்கள் கூறிய கருத்து வைரலாகும் வீடியோ காட்சி...
உலகம் முழுவதம் விரம்பப்படும் பானி பூரியை பெங்களூரை சேர்ந்த பானி பூரி வியாபாரி தங்கம் மற்றும் வெள்ளி பானி பூரியை விற்பனை செய்து வருகிறார்.
பானி பூரி
பானி பூரி பொதுவாக வேகவைத்த உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலையுடன் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு என பல்வேறு விதமான மசாலாக்கள் சேர்த்து காரமான நீரின் கலவையை ஊற்றி சாப்பிடுவதாகும்.
இந்நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி பானி பூரி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதை பெங்களூரை சேர்ந்த பானி பூரி வியாபாரி விற்று வருகிறார்.
அதில் தங்க நிற தட்டு மற்றும் கண்ணாடிகளின் மேல் பூரிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த பூரிகளானது தங்க நிற குடுவைகள் மீது அழகாக வைக்கப்படுகிறது.
பின்னர் பூரிகளில் நட்ஸ் மற்றும் தேனை நிரப்புகின்றனர். பின்னர் பூரிகளின் மீது உண்ணக்கூடிய தங்கம் மற்றும் வெள்ளியின் தாள்கள் வைக்கப்படுகிறது.