Paneer egg idli: பன்னீரும், முட்டையும் இருக்கா? வித்தியாசமான காலை உணவு செய்யலாம்
பொதுவாக வீடுகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் என்ன சமைப்பது என்பது பெரும் யோசனையாகவே இருக்கும். அதிலும் காலை உணவு மிகவும் சத்துக்கள் நிறைந்து இருக்க வேண்டும்.
மிகவும் சுலபமாக பன்னீருடன் மற்றும் முட்டையை சேர்த்து காலை நேர உணவை எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
துருவிய பன்னீர் - 1/2 கப்
முட்டை - 2
துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - 1/4 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் துருவிய பன்னீர், துருவிய தேங்காய், மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு வாணலி ஒன்றினை அடுப்பில் வைத்து, 1/4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளித்து, அதனுடன் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி முட்டை கலவையுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின்னர் இட்லி பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு நீர் கொதித்ததும், இட்லி தட்டில் எண்ணெய் தடவி, நீங்கள் கலந்து வைத்திருக்கும் கலவையை இட்லி போன்று ஊற்றி 10 நிமிடம் வேக வைத்து எடுத்தால் சுவையான பன்னீர் முட்டை இட்லி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |