பாண்டியன் ஸ்டோர்ஸில் கொடிக்கட்டி பறக்கும் தனம்! மார்டன் உடையில் ஜொலிக்கும் புகைப்படங்கள்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கேரக்டரில் நடித்து வரும் சுஜிதா தனுஷ், மார்டன் உடையில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருக்கும் சீரியலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பார்க்கப்படுகிறது.
மேலும் அண்ணன், தம்பி பாசம், குடும்ப வாழ்க்கை இவையனைத்தையும் வைத்து கதை நகர்வதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.
இந்த சீரியலில் தனம் கேரக்டரில் நடிக்கும் சுஜிதாவிற்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
கதையிலுள்ள அனைத்து கதாபாத்திரத்தை கட்டுபடுத்தி தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் பாண்டியன் ஸ்டோர்ஸை நகர்த்தி செல்கிறார்.
தனத்திற்கான சம்பளம்
மேலும் இவர் தன்னுடைய சின்னத்திரை பயணத்தை இளம் வயதிலே ஆரம்பித்து விட்டாராம். இவர் நடிப்பையும் தவிர்த்து டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் பணியாற்றி வருகிறார்.
மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அதிகம் சம்பளம் வாங்குபவர் இவர் என தகவல் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் இவர் நாளொன்றுக்கு சுமார் 17 ஆயிரம் முதல் சம்பளம் வாங்குகிறாராம்.
மார்டன் உடையில் அழகிய புகைப்படங்கள்
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போது ஆக்டிவ்வாக இருக்கின்ற சுஜிதா தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அதிகமாக பகிர்வார்.
இதன்படி, சேலையில் குடும்பகுத்து விளக்காக நடித்து வரும் இவர் தற்போது மார்டன் உடையில் அட்டகாசமான புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், வயதானலும் உங்கள் அழகு இன்றும் அப்படியே இருக்கிறது என கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.