சீரியலிலிருந்து விலகுவது உண்மையா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் வெளியிட்ட உண்மை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் முல்லை கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் ஏராளம் என்றே கூறலாம். அதிலும் கதிர் கதாபாத்திரத்தில் நடிக்கும் குமரனுக்கு ரசிகர்கள் பட்டாளம் மிக மிக அதிகமே.
இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், உங்கள் எல்லோருக்கும் ஷோ பிடித்திருக்கும் என நம்புகிறேன். நான் தான் இந்த ஷோவுக்கு பெஸ்ட் ஆடியன்ஸ், முழுக்க சிரித்து கொண்டிருந்தேன்.
ஜெயிக்கிறோமோ இல்லையோ, நான் மகிழ்ச்சியாக இருந்தேன். அதே போல நீங்கள் பார்த்ததை கொண்டு மகிழ்ச்சி அடையுங்கள். தற்போது ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்துவோம். அடுத்து என்ன? என பதிவிட்டிருந்தார்.
இதனை அவதானித்த ரசிகர்கள் குமரன் பிரபல சீரியலிலிருந்து விலகுகிறார் என்று தகவல் வெளியான நிலையில், இதுகுறித்து விளக்கமளித்த குமரன், சமீபத்தில் விருது வழங்கும் விழா நடந்தது. அதில் எனக்கு விருது கிடைக்கவில்லை என சமூக வலைதளங்களில் எனது ரசிகர்கள் சிலர் வருத்தப்பட்டாங்க. ஆதங்கமாக பதிவுகளை வெளியிட்டனர்.
அதற்கு பதிலளிக்கும் வகையில்தான் நான், என் கடமையை சரியா செஞ்சேன். விருது பற்றி யோசிச்சிக்க வேண்டாம். அடுத்து என்ன என்பதை பார்ப்போம் என்று பதிவிட்டிருந்தேன். ஆனால் எனது அந்தப் பதிவை சிலர் தவறாக புரிந்துகொண்டுள்ளார் என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.