நடிகர் பாண்டியராஜனின் மனைவி மற்றும் 3 மகன்களை பார்த்துள்ளீர்களா? இதில் அடுத்த ஹூரோ யாரு? இணையத்தில் கசிந்த புகைப்படம்
தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் குணச்சித்திர நடிகராகவும் வெற்றிபெற்ற பலர் இருக்கிறார்கள். ஆனால் இயக்குநராகவும் நாயக நடிகராகவும் வெற்றிபெற்றவர்கள் சிலர்தான். அந்த வெகு சிலரில் ஒருவராக ஆர்.பாண்டியராஜன் இருந்தார். சென்னை சைதாப்பேட்டையில் பிறந்து வளர்ந்தவரான பாண்டியராஜன் அரசுப் பள்ளி மாணவர். தமிழிசைக் கல்லூரியில் வயலின் இசையில் 'இசைச் செல்வம்' பட்டம் பெற்றார். பிற்காலத்தில் தமிழ் சினிமா குறித்து ஆய்வு செய்து எம்.ஃபில் பட்டம் பெற்றார்.
1990-களில் கிட்டத்தட்ட 25 படங்களில் நடித்தார் பாண்டியராஜன். இவற்றில் பெரும்பாலான படங்களில் அவர்தான் கதாநாயகன். வாசுகி என்பவரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு 3 மகன்கள் உள்ளார்கள்.
அதில் ஒருவர் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிவிட்டார்.
தற்போது நடிகர் பாண்டியராஜனின் மொத்த குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக்கில் உள்ளனர்.
