பாண்டியன் ஸ்டோர்ஸ் வில்லியாக மாறிவரும் ஐசுவின் Beauty Tips
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து நீக்கப்பட்ட விஜே தீபிகா மீண்டும் கெத்தாக அதே சீரியலில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
அண்ணன்- தம்பிகளின் பாசத்தை மையப்படுத்தி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ், இதில் கடைசி தம்பியாக வரும் கண்ணனுக்கு ஜோடியாக விஜே தீபிகா நடித்துக் கொண்டிருந்தார்.
சில காரணங்களில் அவர் சீரியலை விட்டு நீக்கப்பட, வேறொரு நடிகை நடித்துவந்தார், தற்போது மீண்டும் விஜே தீபிகாவே நடித்து வருகிறார்.
தற்போது இவரது கதாபாத்திரம் நெகடிவ்வாக சென்று கொண்டிருக்கிறது, இதனால் பல டுவிஸ்டுகளும் சீரியலில் நடந்து வருகின்றன.
இதுபற்றி சமீபத்தில் கூட பதிவிட்ட தீபிகா, அதிர்ஷ்டம் ஒருவாட்டி தான் கதவ தட்டும் சொல்லுவாங்க, அது சரிதான், ஆனா முயற்சியும் நம்பிக்கையும் ஒன்னு இல்ல ஆயிரம் கதவுகளை கூட திறக்க செய்யும்.
ஐஸ்வர்யாவா என்னோட பயணம் பாதியில முடிஞ்சது ஆனா இப்போ எங்க முடிஞ்சதோ அங்கயே ஒரு தொடக்கம் வந்துருக்கு எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு விஷயம் தான் சொல்ல போறேன்.
ஒரு பொருள் நம்மகிட்ட இல்லாதப்போ தான் அதோட வலி என்னனு நமக்கு புரியும், எனக்கும் நிறையவே புரிஞ்சது நல்லாவே தெரிஞ்சது.
இப்போ அது திரும்ப கிடைச்சிருக்கு, அதனால அதோட மதிப்பு எனக்கு நல்லவே தெரியும். இவ்ளோ நாள் எனக்காக ஃபீல் பண்ணவங்களுக்கும், இப்போ எனக்கு விஷ் பண்றவங்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.
தீபிகாவுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் உங்களோட ஆதரவும் வரவேற்பும் எப்பவும் வேணும்’ என்று தீபிகா மனமுருக அதில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் தன்னை தானே மெருகேற்றி கொண்டது குறித்தும் அதற்கான மெனக்கெடல்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டுள்ளார்.