விஜய் தங்கை இறந்த போது... பல உருக்கமான தகவல்கள் பகிர்ந்து கொண்ட சித்தி
பாண்டியன் ஸ்டோர்ஸில் நடித்து வந்த நடிகை ஷீலா அண்மையில் அளித்த பேட்டியொன்றில் விஜய் குறித்து பல தகவல்களைப் பேசியிருந்தார்.
விஜய்யின் சித்தி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் குடும்ப ஒற்றுமையையும் அண்ணன் தம்பிகளின் பாசப் பிணைப்பையும் பறைசாற்றும் தொடர் தான் இந்த சீரியல் அமைந்திருக்கிறது.
இந்தத் தொடரில் 4 அண்ணன் தம்பிகள் இவர்களை வைத்துதான் இந்தக் கதை நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இந்த நாலுப்பிள்ளைகளுக்கும் தாயாக நடித்தவர் தான் ஷீலா இவர் அண்மையில் அளித்த பேட்டியொன்றில் நடிகர் விஜய் பற்றி நிறைய விடயங்களைப் பகிர்ந்துக் கொண்டார்.
நடிகை ஷீலாவை உங்கள் எல்லோருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தான் தெரியும். இவர் தற்போது உச்ச நடிகராக இருக்கும் விஜய்யின் சித்தி அதாவது விஜய்யின் அம்மா சோபனாவின் தங்கை. மேலும், நடிகர் விக்ராந்தின் தாயுமாவார்.
இவர் இதற்கு பாக்கியலட்சுமி, பாரதிதாசன் காலனி போன்ற சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.
விஜய்க்கு ஏற்பட்ட பெரிய இழப்பு
இதுதான் விஜய் பிறக்கும் போது நான் 10வது படித்துக் கொண்டிருந்தேன். சிறுவயதில் அவன் எந்தக் குளப்படிகளும் செய்யாமல் சமத்துப் பையனாகவே இருந்தான்.
நாங்கள் எல்லோரும் சேர்ந்து தான் விஜய்யை வளர்ந்தோம். ஆனால் இப்போது விஜய் படங்களில் பிஸியாக நடித்து வருவதால் அவனுடன் பேசவது இல்லை அது கொஞ்சம் வருத்தமாக இருக்கின்றது.
மேலும், விஜய் சிறுவயதில் இருக்கும்போது அவனது தங்கை இறந்து விட்டார். அப்போது நாங்கள் எல்லோரும் ஒன்றாகத் தான் இருந்தோம்.
அப்போதைய காலத்தில் பெரியளவில் மருத்துவ வசதிகள் இல்லாததால் விஜய்யின் தங்கையை காப்பாற்ற முடியவில்லை. நோய்வாய்ப்பட்டு தங்கை இறந்த பிறகு விஜய் மிகவும் சோகமாகி அமைதியாகி விட்டான்.
கொஞ்சம் பெரியவன் ஆனதும், நாங்கள் எல்லோரும் பக்கம் பக்கம் தான் இருந்தோம். அப்போது அந்தப் பக்கம் படப்பிடிப்புகள் நடைபெறும் அப்போதெல்லாம் விஜய் படித்துக் கொண்டிருந்தான்.
ஆனால் நடிக்கத் தொடங்கி விட்டான். விஜய் சினிமாவிற்குள் செல்வான் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. இப்போது பெரும் உயரத்திற்கு சென்று விட்டான்.
எனக்குக் கூட விஜய் படத்துல நடிக்கணும்னு ஆசை. இது மூலமா விஜய் பார்த்து, சித்தி வாங்க உங்களுக்கு படத்துல ஒரு கேரக்டர் இருக்கு என கூப்பிட்டா உடனே போயிடுவேன், அதுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் என தெரிவித்துள்ளார்.
