தனத்திற்கு நடக்கும் அறுவை சிகிச்சை... டுவிஸ்ட் வைக்காமல் சட்டென முடிந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அனைவரும் எதிர்ப்பார்த்த பரபரப்பான திருப்பங்கள் எதுவும் இல்லாமல் சப்பென்று முடிந்து விட்டது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
குடும்ப ஒற்றுமையையும் அண்ணன் தம்பிகளின் பாசப் பிணைப்பையும் பறைசாற்றும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியல் இரவு 8.30 மணிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். இந்த நான்கு அண்ணன் தம்பிகளும் திருமணம் முடித்து ஒன்றாக ஒரே வீட்டில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் வாழ்வார்களா இல்லையா? என்பது தான் தொடரின் கதையாக தற்போது நகர்ந்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், தனத்திற்கு மார்பக புற்று நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. சில காலமாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி வந்த தனம் இந்த உண்மையை வீட்டில் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்தார்.
ஆனால் மீனா இதனைத் அறிந்துக் கொண்டு யாருக்கும் சொல்லாமல் மறைந்து வைத்திருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் இந்த விடயம் முல்லைக்கு தெரிந்து விட மீனாவும் முல்லையும் தனத்திற்கு சிகிச்சை செய்ய முடிவெடுத்தார்கள்.
இன்றைய ப்ரோமோ காட்சியில்
இந்நிலையில், தனத்திற்கு வீட்டில் யாருக்கும் தெரியாமல் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்து அந்த சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறார்கள்.
சிகிச்சை முடிந்தவுடன் தனம் மீனாவிற்கும் முல்லைக்கும் நன்றி சொல்லும் நெகிழ்ச்சியான தருணம் ப்ரோமாவாக வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |