ரோஜா சீரியலில் இருந்து விலக இதுதான் காரணம்! உருக்கமாக உண்மையை உடைத்த நடிகர்; பதறிய ரசிகர்கள்
பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ரோஜா சீரியல் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் நடித்த அஸ்வின் கதாபாத்திரம் மக்களிடையே மிகவும் கவர்ந்தது.
அதில், நடித்த வெங்கட் என்பவர், சமீபத்தில் ரோஜா சீரியல் விட்டு விலகுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதனை கண்ட ரசிகர்கள் ஏன் விலகினார் என்று கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில், இவர் ஏன் விலகுகிறார் என்று தெரியாமல் இருந்து வந்த நிலையில் இதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ளார்,. அதில், கொரோனா காலத்தில் தனது உடல்நிலை மிக மோசமாக இருந்ததால் எனக்கு இடைவெளி தேவைப்பட்டது.
ஆனாலும் நான் தொடர்ந்து ரோஜா சீரியலில் நடித்து வந்தேன். ஷூட்டிங்கில் சண்டைக் காட்சியிலும் வலிகளை தாண்டி நடித்தேன். அதற்கு காரணம் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் எனக்கு ஆதரவு இருந்தது.
ஆனால், சேனலில் இருந்து எந்த ஆதரவும் அளிக்கவில்லை. பின்னர் தான் மற்றொரு எதிர் பிரபல சேனலில் நடித்து வருவதால் பார்ஷியாலிட்டி காட்டினர். அதனால் தான் ரோஜா சீரியலை விட்டு விலகினேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், வெங்கட் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.