முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்... கடைசி எபிசோட் எப்போ தெரியுமா?
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருக்கும் நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
அண்ணன் - தம்பி பாசம், கூட்டு குடும்பம் என வாழ்க்கையை எடுத்துக்காட்டாக காட்டும் இந்த சீரியல் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தற்போது, இந்த காலத்தில் எதார்த்தமாக நடக்கும் ஒரு விஷயம் தொடர்பாக கதை சென்று கொண்டிருப்பதால், ரசிகர்கள் ஆர்வமாக பார்க்க தொடங்கியுள்ளனர்.
ஆரம்பத்தில் பிரியாமல் இருந்து வந்த அண்ணன் தம்பிகள் சமீப காலமாக பிரிந்து வெளியே சென்றனர். பின்பு மீண்டும் ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.
முடிவுக்கு வரும் சீரியல்
தற்போது குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் அனைத்தும் தீர்ந்து போன நிலையில், அனைவரும் புது வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
தனத்திற்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டு அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போதுள்ள காலக்கட்டத்தில் புற்றுநோய் அதிகமாக பரவி வரும் நிலையில், அதன் விழிப்புணர்வை மக்களுக்கு கொண்டு வர இந்த கதைக்களத்தை வைத்து சிறப்பாக கொண்டு சென்றுள்ளனர்.
தற்போது 5 ஆண்டுகளுக்கு மேல் ஓடிக்கொண்டிருக்கும் குறித்த சீரியல் சுவாரசியம் குறைந்து முடிவிற்கு வரும் நிலைக்கு சென்றுள்ளது. மேலும் இதன் இரண்டாவது பாகம் தொடங்க இருப்பதாகவும், இதில் தனமாக நடிக்கும் சுஜிதாவும், கதிராக நடிக்கும் குமரன் இருவரும் நடிப்பார்களா என்ற கேள்வியும் எழுந்து வருகின்றது.
சீரியலில் மட்டுமல்ல நிஜத்திலும் கூட்டு குடும்பம் தான்: பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தியின் வைரல் புகைப்படம்
இந்நிலையில் செப்டம்பர் 30ம் தேதி குறித்த சீரியல் முடிவிற்கு வருவதாகவும், அனைத்து பிரச்சினையும் முடிவுக்கு வந்துள்ளதால் கதை இறுதிகட்டத்தை எட்டிவிட்டதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |