இன்னும் சில எபிசோட்களில் நிறைவிற்கு வரும் தொடர்.. தனத்தால் வெளியான ரகசியம்!
இன்னும் சில எபிசோட்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நிறைவிற்கு வர போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியல் மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் அண்ணன் - தம்பிகளின் பாசத்தை அழகாக காட்டி வருகிறது.
இதன்படி, மீனாவின் அப்பாவை ஜீவாவும், கதிரும் கொலைச் செய்ய முயன்றதாக பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆனால் இந்த பிரசாந்த் தான் சொத்திற்கு ஆசைப்பட்டு அவருடைய மாமனாரை கத்தியால் குத்தினார்.
மருத்துவமனையில் மீனாவின் அப்பா கண் விழிக்க முடியாத நிலையில் இருக்கிறார்.
இதனை தொடர்ந்து பொலிஸார் விசாரணை மற்றும் மீனாவின் தீவிர முயற்சி என கதை விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
நிறைவிற்கு வருகின்றதா?
இது ஒரு புறம் இருக்கையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்கள் சீரியலில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றார்கள்.
அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய வேடத்தில் நடிக்கும் தனம் என்கிற “சுஜித்திரா” பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஒன்றாக இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
சாப்பாடு பிரச்சினையால் கெப்டனை ரவுண்டு கட்டி அடிக்கும் போட்டியாளர்கள்: பாடாய் படுத்தும் SMALL BOSS வீட்டினர்
புகைப்படத்தை பார்த்த சீரியல் ரசிகர்கள் “ சீரியல் நிறைவிற்கு வருகின்றதா?” என குழப்பத்தில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.