5 வருட குடும்ப பயணத்தின் இறுதி வாரம்... மற்றுமொரு கதையை நோக்கி நகரும் இரண்டாம் பாகம்
5 வருடமாக அனைத்து இல்லங்களிலும் ஓடிக் கொண்டிருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இறுதிப் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
குடும்ப ஒற்றுமையையும் அண்ணன் தம்பிகளின் பாசப் பிணைப்பையும் பறைசாற்றும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் இரவு 8.30 மணிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்.
இந்தக் கதையில் நான்கு அண்ணன் தம்பிகளும் திருமணம் முடித்து அவரவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பல பிரச்சினைகளை காட்சிகளாக காட்டி வருகிறார்கள்.
இந்த சீரியலில் தற்போது பல பிரச்சினைகளைத் தாண்டி தற்போது மொத்த குடும்பமாக இணைந்திருக்கிறார்கள்.
இறுதி ப்ரோமோ
இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலானது கடந்த 5 வருடங்களாக அனைத்து இல்லங்களிலும் ஒரு பெரும் ஆதிக்கம் செலுத்தி வந்தது.
தற்போது இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இந்தவாரம் நிறைவிற்கு வரவுள்ளது. அந்தவகையில், இந்த சீரியலின் இறுதிப் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிந்தவுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் பாகம் இரண்டும் அடுத்து வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |