பிரசாந்த் கொடுத்த பொய் வாக்குமூலம்... உண்மை தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறிய மீனா.. பரபரப்பான ப்ரோமோ காட்சி
பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோவில் பிரசாந்த் செய்த குற்றத்திற்காக கதிர் மற்றும் ஜீவா கைதாகி பொய் வாக்குமூலம் கொடுத்து குடும்பத்தை பிரித்த ப்ரோமோ காட்சி வைரலாகி வருகின்றது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
குடும்ப ஒற்றுமையையும் அண்ணன் தம்பிகளின் பாசப் பிணைப்பையும் பறைசாற்றும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் இரவு 8.30 மணிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்.
இந்த நான்கு அண்ணன் தம்பிகளும் திருமணம் முடித்து ஒன்றாக ஒரே வீட்டில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் வாழ்வார்களா இல்லையா? என்பது தான் தொடரின் கதையாக தற்போது நகர்ந்துக் கொண்டிருக்கிறது.
வீட்டை விட்டு சென்ற மீனா
கடந்த வார ப்ரோமோவில் மீனாவின் அப்பாவை கத்தியால் குத்திய காட்சிகள் படும் வைரலாகி வந்தது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவாவிற்கும் மீனாவின் அப்பாவிற்கும் சில காலமாக கருத்து முரண்பாடுகள் பல ஏற்பட்டிருந்த நிலையில், அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மீனாவின் தங்கை கணவர் பிரசாந்த் தன் மாமானாரை கொலை செய்திருக்கிறார்.
பிரசாந்த் சாமர்த்தியமாக சதிவேலைகளை செய்து பொலிஸ் மீனாவின் தந்தையை குத்தியது ஜீவா மற்றும் கதிர் தான் என்று பொய் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
இதனைக் கேட்ட மீனா இனி இந்த வீட்டில் நமக்கு வேலை இல்லை என்று பிள்ளையையும் தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு கிளம்பும் காட்சிகள் ப்ரோமோவாக வெளியாகியுள்ளது.