அதிரடியாக கைது செய்யப்பட்ட ஜீவா, கதிர்.. பின்னால் இருந்து வேலை பார்த்தது யார் தெரியுமா?
ஜீவாவின் மாமனாரை வெட்டி விட்டு ஜீவா, கதிர் மீது பலி விழுந்த காரணத்தினால் அதிரடியாக இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பிரபல தொலைக்காட்சியில் கடந்த 2018ம் ஆண்டிலிருந்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியல் மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் 4 அண்ணன் தம்பிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகின்றது.
மக்களின் நெஞ்சங்களை வென்ற இந்த சீரியல் 5 ஆண்டுகளாக வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், குடும்ப பிரச்சினைகள் நிறைவடைந்து நல்லப்படியாக சென்றுக் கொண்டிருக்கும் வேலையில் மீண்டும் ஒரு பிரச்சினை ஆரம்பமாகியுள்ளது.
அதிரடியாக கைது செய்யபட்ட இருவர்
அந்த வகையில் மீனாவின் அப்பாவை வெட்டிய வழக்கில் ஜீவாவும், கதிரும் கைது செய்யப்படுகிறார்கள்.
இதனை மீனாவும் எதிர்பார்க்கவில்லை இதனால் அதிர்ச்சியில் வியந்து போய் நிற்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நிறைவடையும் என ரசிகர்களால் எதிர்பார்த்த நிலையில் இப்படியொரு திருப்பம் வருவது ரசிகர்களை விறுவிறுப்பாக்கியுள்ளது.
அத்துடன் இந்த வழக்கு தொடர்பில் மூர்த்தியின் முடிவு என்ன என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |