என் பொண்ணுக்காவது அப்பாவா இருக்கவிடுங்க! கொந்தளிக்கும் ஜீவா: இனி நடக்கப் போவது என்ன?
தயவு செஞ்சி ஏ பொண்ணுக்காவது என்னை ஒரு அப்பாவா இருக்க விடுங்க என ஜீவா கொந்தளித்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியலில் மூர்த்தி, கதிர்,ஜீவா, கண்ணன் என நான்கு கதாநாயகர்களும், தனம்,முல்லை, மீனா, ஐஸ்வர்யா என நான்கு கதாநாயகிகளையும் கொண்டு நகர்த்தப்படுகிறது.
இதனை இந்த சீரியலில் கொஞ்சம் நாளாக பெறும் சண்டையாகவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் பிரிந்த நிலையிலும் காணப்படுகிறது.
இந்த சமயத்தை சரியாக பயன்படுத்தி கொண்ட மீனாவின் அப்பா வாழ்க்கையின் முக்கியமான விடயங்களை அவரே முடிவு செய்கிறார்.
மீனாவின் அப்பா எடுத்த முடிவு
இந்த நிலையில் கயல் எந்த பாடசாலையில் படிக்க வேண்டும் என்பதனை கூட மீனாவின் அப்பா தான் முடிவு செய்கிறார்.
இதனால் கடுப்பான ஜீவா,“ தயவு செய்து என்னுடைய குழந்தைக்கு சரி என்னை அப்பாவாக இருக்க விடுங்க.” என கோபமாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்னும் சூடுபிடிக்கும் என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.