குடும்ப பிரச்சினையை சாக்காக வைத்து குட்டைய குழப்பும் ஐசு.. எல்லை மீறும் வாக்குவாதங்கள்: சூடுபிடிக்கும் ஆட்டம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலிருந்து கண்ணன்- ஐஸ்வர்யாவை வெளியேறுமாறு மூர்த்தி அவர் வாயால் கூறியுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக செல்லும் தொடர்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியலில் ஆரம்பத்திலிருந்து ஒரு கூட்டு குடும்பத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதனை அழகாக காட்டிருப்பார்கள்.
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிலிருக்கும் மூன்று மருமகள்களும் கர்ப்பமாக இருப்பதால் மீனா தான் இவ்வளவு காலமாக பார்த்து கொண்டிருந்தார்.
மீனாவின் தங்கை திருமணத்தில் மொய் வைக்க சென்ற இடத்தில் கண்ணன் செய்த சதியால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலிருந்து ஜீவாவும், மீனாவும் பிரிந்து சென்று விட்டார்கள்.
வீட்டை விட்டு வெளியேற திட்டம் போட்ட ஐசு
இதனை தொடர்ந்து கண்ணனை தனம் திட்டும் போது ஐசு இடையில் வந்து பல கஷ்டங்களுக்கு மத்தியில் தான் இந்த குடும்பத்திலிருந்து வருகிறோம் என கூறியுள்ளார்.
இதனால் கடுப்பான மூர்த்தி அவ்வளவு கஷ்டப்பட்டுட்டு இந்த குடும்பத்தில் இருக்க வேண்டாம் என கூறியுள்ளார்.
இதனால் கண்ணன் இல்லாமல் வெளியில் செல்வதா அல்லது கண்ணனுடன் வெளியில் செல்வதா? என பதிலுக்கு கேள்வி கேட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த பரபரப்பான நிலையில் இருவரும் வெளியேறி விட்டார்கள் என்றால் கதிம் - முல்லை, மூர்த்தி - தனமும் தான் இருக்க போகிறார்களாம்.