மொய் வைப்பதினால் சுக்குநூறாக உடையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்! பரபரப்பான தருணங்கள்
மீனாவின் திருமணத்திற்கு செல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தனித்தனியாக மொய் வைக்க திட்டமிட்டுள்ளது.
பரபரப்பான தருணங்களுடன் நகரும் கதை
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக செல்வும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் நடிக்கும் நடிகர்கள் அனைரையும் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதனால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் என்றாலே குடும்ப ஒற்றுமை, அதில் நடக்கும் சிறிய சிறிய சண்டைகள் அதனை எவ்வாறு நாம் சரிச் செய்வது என்பதை கருவாகக் கொண்டு தான் நகர்த்தப்பட்டு வருகிறது.
வீட்டில் மூவரும் கர்ப்பமாக இருப்பதால் மீனா தான் இவர்களை தனியாக கவனித்து கொண்டு வருகிறார். இதனால் நாளுக்கு நாள் மீனாவின் வேலைகள் அதிகரித்து வருகிறது.
இதனை தொடர்ந்து கண்ணன் ஐசுவை திருமணம் செய்த பின்னர் கண்ணனின் ஆட்டம் வீட்டில் சூடுபிடித்துள்ளது.
சுக்குநூறாக உடையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்
இந்த நிலையில் மீனாவின் தங்கைக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதில் குடும்பமாக மூர்த்தியின் குடும்பம் கலந்துக் கொண்டுள்ளது.
மீனாவின் குடும்பம் தான் ஆரம்பத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸின் வீட்டை பிடிங்கிக் கொண்டு அனைவரையும் வெளியில் அனுப்பியது.
தற்போது அவர்கள் இந்த திருமணத்தில் மீண்டும் இந்த குடும்பத்தை பிரிக்க திட்டம் போட்டுள்ளார்கள். அந்த வகையில் திருமணத்திற்கு அனைவரும் தனிதனியாக மொய் கொடுக்க செல்கிறார்கள்.
தற்போது வெளியான ப்ரோமோவில் ஏதாவது குழப்பம் நடந்து குடும்பம் இரண்டாக பிரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.