பாண்டியன் ஸ்டோர்ஸ் புது வீட்டிற்கும், சிம்புவிற்கும் என்ன கனெக்ஷன்? உண்மையை உடைத்த மீனா
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய வீட்டிற்கு சென்றுள்ள நிலயைில், குறித்த வீடு குறித்து மீனா பல விடயங்களை கூறியுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
அண்ணன் - தம்பி பாசம், கூட்டு குடும்பம் என வாழ்க்கையை எடுத்துக்காட்டாக காட்டும் இந்த சீரியல் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தற்போது, இந்த காலத்தில் எதார்த்தமாக நடக்கும் ஒரு விஷயம் தொடர்பாக கதை சென்று கொண்டிருப்பதால், ரசிகர்கள் ஆர்வமாக பார்க்க தொடங்கியுள்ளனர்.
3 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் விரைவில் முடிய உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றது.
புதிய வீடு
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முதன் முதலில் செட்டிநாடு வீட்டை காண்பித்திருந்த நிலையில், அதன் பின்பு கதிர் இருந்த மற்றொரு வீட்டை காட்டினர்.
பின்பு இடம் வாங்கி வீடு கட்டுவது போன்று கதையை எடுத்துச் சென்ற நிலையில், தற்போது கிரகப்பிரவேசம் முடிந்துள்ளது. இந்த புதிய வீடு இசிஆரில் இருக்கின்றதாம்.
இந்த வீடு குறித்து நடிகை ஹேமா தனது வீடியோ ஒன்றில் சில தகவல்களை வெளியிட்டுள்ளார். தான் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் செட்டுக்கு அழைத்துச் செல்லப்போகிறேன் என்று புதிய வீட்டிற்கு வந்துள்ளார்.
அதிக தூரம் வர வேண்டிய இந்த வீட்டிற்கு வந்து போவது ஊருக்கு வந்து போகிறது மாதிரி இருப்பதாகவும், இதுபோன்று தனது அம்மாவின் தங்கச்சி வீடு உள்ளது... அதுவும் படப்பிடிப்பிற்கு பயன்படுத்துகின்றனர் என்று கூறியுள்ளார்.
மேலும் வெளியே ஒருவர் சிம்பு அம்மா மாதிரி இருந்தாங்க... எனக்கு சரியாக தெரியவில்லை... இனி இங்கதானே இருக்கப்போகிறோம் போக போக பார்த்துக்கலாம் என்று நகைச்சுவையாக பேசியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |