சீரியலில் மட்டுமல்ல நிஜத்திலும் கூட்டு குடும்பம் தான்: பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தியின் வைரல் புகைப்படம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் மூர்த்தியின் குடும்ப புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி
குடும்ப ஒற்றுமையையும் அண்ணன் தம்பிகளின் பாசப் பிணைப்பையும் பறைசாற்றும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியல் இரவு 8.30 மணிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். இந்தக் கதையில் நான்கு அண்ணன் தம்பிகளும் திருமணம் முடித்து அவரவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பல பிரச்சினைகளை காட்சிகளாக காட்டி வருகிறார்கள்.
இந்த சீரியலில் மூத்த அண்ணனாக நடித்து வரும் சத்தியமூர்த்தியின் நிஜப் பெயர் ஸ்டாலின். இவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். மேலும், இவர் பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் அண்ணன் மகன் ஆவார்.
இவர் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான தெற்கத்தி பொண்ணு எனும் சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்.
அந்த சீரியலைத் தொடர்ந்து ஆண்டாள் அழகர், கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி போன்ற சீரியல்களில் நடித்தவர். இவர் சீரியலில் மட்டுமல்லாது சினிமாவிலும் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
கூட்டுக் குடும்பம்
அவர் நடிக்கும் சீரியல்களில் மாத்திரமல்லாது நிஜவாழ்க்கையிலும் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் அடிக்கடி தன் குடும்ப புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில், தன் மொத்தக் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |