ஆடம்பரத்தில் மூர்த்தி செய்த காரியம்... இடியாக வந்திறங்கிய சோகம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தி ஆடம்பரமாக செய்த செயல் கடைசியில் அவருக்கு இடியாக வந்திறங்கியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
அண்ணன் - தம்பி பாசம், கூட்டு குடும்பம் என வாழ்க்கையை எடுத்துக்காட்டாக காட்டும் இந்த சீரியல் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தற்போது, இந்த காலத்தில் எதார்த்தமாக நடக்கும் ஒரு விஷயம் தொடர்பாக கதை சென்று கொண்டிருப்பதால், ரசிகர்கள் ஆர்வமாக பார்க்க தொடங்கியுள்ளனர்.
ஆரம்பத்தில் பிரியாமல் இருந்து வந்த அண்ணன் தம்பிகள் சமீப காலமாக பிரிந்து வெளியே சென்றனர். பின்பு மீண்டும் ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.
தனத்திற்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்ட நிலையில், அவருக்காக மூர்த்தி வீட்டில் அனைத்தையும் பார்த்து பார்த்து செய்கின்றார். ஆதலால் அவரது அறைக்கு ஏசி புதிதாக வாங்கி மாட்டியுள்ள நிலையில், மற்ற தம்பிகளின் அறைக்கும் ஏசி வாங்கி மகிழ்வித்துள்ளார்.
ஆனால் மின்கட்டணம் தாறுமாறாக எகிறியுள்ளதால், கோபமாக ஒரு கண்டிஷனை போட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |