சீரியிலில் உயிரிழந்த லட்சுமி அம்மா: நிஜத்தில் வெளியிட்ட புகைப்படம்!
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸில் தற்போது இறந்ததாக காட்டப்படும் பிரபல நடிகை அந்த சீரியலின் இயக்குனருடன் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது கண்ணீரின் உச்சத்தில் செல்கின்றது. காரணம் மூர்த்தி பிரதர்ஸின் தாயார் லட்சுமி அம்மா சீரியலில் உயிரிழந்ததாக காட்டப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் சீரியலில் மரணமடைந்த லட்சுமி அம்மா ரியலில், குறித்த சீரியலின் இயக்குனருடன் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
இதனை அவதானித்த ரசிகர்கள் லட்சுமி அம்மாவின் நடிப்பினை வைத்து பாராட்டியும், சிலர் என்னப்பா இது? பிணம் எழுந்து போட்டோக்கு போஸ் கொடுக்குது என்றும் ஒருவேளை சுடுகாட்டுல வைச்சு எழும்பிட்டாங்களோ? எதோ அசந்து தூங்கிட்டாங்க அதுக்குள்ள செத்துட்டாங்கனு சொல்லி கதையை முடிச்சிட்டாங்களே... என்ற கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.