அம்மாவின் முகத்தை கடைசி வரை பார்க்காத கண்ணன்? கண்ணீர் காட்சிகள்
குடும்ப பாங்கான கதைக்களம் கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸில் லட்சுமி அம்மா இறந்துவிட குடும்பமே கதிகலங்கி நிற்கிறது.
நான்கு அண்ணன் தம்பிகள் பாசத்துடன் வளர்ந்து வருகின்றனர், கடைசி தம்பி கண்ணன் திடீரென ஐஸ்வர்யாவை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துகொள்ள குடும்பமே உடைந்துவிடுகிறது.
கண்ணனையும், அவரது மனைவி ஐஸ்வர்யாவையும் ஒதுக்கி வைக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.
இதற்கிடையே லட்சுமி அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, தூக்கத்திலேயே உயிர் பிரிந்து விடுகிறது.
இதனால் குடும்பமே பேரதிர்ச்சியில் உறைந்து போக, கண்ணன் திருச்சியில் மாட்டிக்கொள்கிறேன்.
போனையும் கண்ணன் மறந்து வைத்துவிடுவதால் தகவல் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இக்கட்டான சூழலில் அம்மாவுக்கு மூர்த்தி, ஜீவா, கதிர் மூவரும் சடங்குகள் செய்து அடக்கம் செல்ல எடுத்து செல்கின்றனர்.
ஊரிலிருந்து தாமதமாக வரும் கண்ணன், அம்மா இறந்த தகவல் அறிந்து வேகமாக ஓடிவருகிறார், அதற்குள் அம்மாவின் சடலத்துக்கு எரியூட்டப்படுகிறது.
தாயின் முகத்தை கடைசியாக பார்க்க முடியாமல் கதறுகிறார் அண்ணன், நெஞ்சை உருக்கும் இந்த காட்சிகள் அடுத்த வாரத்தில் ஒளிபரப்படலாம் என தெரிகிறது.