அம்பலமாகிய தனத்தின் உண்மை... பாண்டியன் ஸ்டோர்ஸில் திடீர் திருப்பம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனத்திற்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், இந்த உண்மை கதிருக்கு தெரியவந்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
அண்ணன் - தம்பி பாசம், கூட்டு குடும்பம் என வாழ்க்கையை எடுத்துக்காட்டாக காட்டும் இந்த சீரியல் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
3 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கும் இத்தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் சமீபத்தில் விருது கிடைத்துள்ளது.
தற்போது, இந்த காலத்தில் எதார்த்தமாக நடக்கும் ஒரு விஷயம் தொடர்பாக கதை சென்று கொண்டிருப்பதால், ரசிகர்கள் ஆர்வமாக பார்க்க தொடங்கியுள்ளனர்.
ஆரம்பத்தில் பிரியாமல் இருந்து வந்த அண்ணன் தம்பிகள் சமீப காலமாக பிரிந்து வெளியே சென்றனர். பின்பு மீண்டும் ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.
மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட தனத்தை வீட்டிலிருந்து வெளியே அழைத்துச் சென்ற மீனா, முல்லை இருவரும் சேர்ந்து மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தற்போது அறுவைசிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தனத்திடம் முல்லை பேசியதை கதிர் கேட்டுள்ளார். பின்பு முல்லையை அதட்டி கதிர் கேட்ட போது முல்லை அனைத்து உண்மையையும் கூறியுள்ளார்.