போராட்டத்திற்கு மத்தியில் சிறையிலிருந்து வெளியே வந்த கதிர்... கண்ணனின் நிலை என்ன?
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் ஐஸ்வர்யாவின் ஆடம்பரத்தினால் கதிர் காவல்நிலைய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் வெளியே வந்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
அண்ணன் - தம்பி பாசம், கூட்டு குடும்பம் என வாழ்க்கையை எடுத்துக்காட்டாக காட்டும் இந்த சீரியல் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
3 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கும் இத்தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் சமீபத்தில் விருது கிடைத்துள்ளது.
தற்போது, இந்த காலத்தில் எதார்த்தமாக நடக்கும் ஒரு விஷயம் தொடர்பாக கதை சென்று கொண்டிருப்பதால், ரசிகர்கள் ஆர்வமாக பார்க்க தொடங்கியுள்ளனர்.
ஆரம்பத்தில் பிரியாமல் இருந்து வந்த அண்ணன் தம்பிகள் சமீப காலமாக பிரிந்து வெளியே சென்றனர். பின்பு மூர்த்தி கதிர் இருவரும் மட்டுமே ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
ஆடம்பரத்தில் ஐஸ்வர்யா
இதில் கண்ணன் ஐஸ்வர்யா தனியாக வீடு எடுத்து தேவையான பொருட்களை எல்லாம் கடனில் வாங்கிக்கொண்டு சிக்கித்தவித்து வருகின்றனர். மற்றொரு புறம் ஜீவா தனது மாமனார் வீட்டில் மனைவியுடன் வசித்து வருகின்றார்.
கண்ணன் மனைவி ஐஸ்வர்யாவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த ஆடம்பரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், கண்ணன் கிரெடிட் கார்டு மூலம் ஆடம்பரமாக செலவு செய்துவிட்டு இறுதியில் கடன் கட்டமுடியாமல் தவித்த நிலையில், கடன்காரர்கள் விட்டிற்கு வந்து பிரச்சினை செய்து கண்ணனை அடித்துள்ளனர்.
இதனால் கோபமடைந்த கதில் குறித்த வங்கி ஊழியர்களை சரமாரியாக அடித்து காவல்நிலைய சிறையில் இருந்து வந்தார். ஐந்து லட்சம் பணம் கொடுத்தால் வழக்கை திரும்பப் பெறுவதாக கூறி வங்கியில் கூறியுள்ளனர்.
ஒருவழியாக கஷ்டப்பட்டு பணத்தினை திரட்டிய மூர்த்தி இறுதியில் கதிரை வெளியே கொண்டுவந்துள்ளார்.