வீட்டைவிட்டு வெளியேறிய கதிர் முல்லை! சுக்குநூறாக உடைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஒற்றுமையாக இருந்த குடும்பத்தில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
அண்ணன் - தம்பி பாசம், கூட்டு குடும்பம் என வாழ்க்கையை எடுத்துக்காட்டாக காட்டும் இந்த சீரியல் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
3 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கும் இத்தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் சமீபத்தில் விருது கிடைத்துள்ளது.
தற்போது, இந்த காலத்தில் எதார்த்தமாக நடக்கும் ஒரு விஷயம் தொடர்பாக கதை சென்று கொண்டிருப்பதால், ரசிகர்கள் ஆர்வமாக பார்க்க தொடங்கியுள்ளனர்.


எதிர்பாராமல் அரங்கேறிய சண்டை
குழந்தை பிறக்க லட்ச கணக்கில் செலவு செய்து சிகிச்சை பெற கடைசியில் அது தோல்வியில் முடிந்துள்ளது. கடன் கொடுத்தவர் பணத்தை கேட்டு வீட்டிற்கு வந்ததால் ஜீவா தனது மனைவி வைத்திருந்த பணத்தினை எடுத்தக்கொடுத்துள்ளார்.
இது மீனாவின் தந்தைக்கு தெரிந்த நிலையில், சண்டைபோட்டுள்ளார். தனத்தின் அண்ணனும் சண்டையில் ஈடுபட இறுதியில், பயங்கர பிரச்சினை எழுந்துள்ளது.

வீட்டை விட்டு வெளியேறிய கதிர்
இதனால், கதிர் தவிர்க்க முடியாத நிலையில், வீட்டை விட்டு கிளம்பும் முடிவுக்கு வருகிறார். ‘முல்லைக்கு செலவு செய்த பணத்தை நான் கொடுத்துவிடுகிறேன், அதற்கு நேரம் கொடுங்கள், நாங்கள் வீட்டை விட்டு போய்விடுகிறோம்’ என கூறி வீட்டை விட்டு கிளம்புகிறார். இந்த ப்ரோமோ வீடியோ செம வைரலாகி வருகிறது.