கண்ணன் ஐஸ்வர்யாவின் ஆடம்பரம்! பலி ஆடாகிய கதிர்... திகைத்து நிற்கும் குடும்பம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் ஐஸ்வர்யாவின் ஆடம்பரத்தினால் கதிர் காவல்நிலையத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
அண்ணன் - தம்பி பாசம், கூட்டு குடும்பம் என வாழ்க்கையை எடுத்துக்காட்டாக காட்டும் இந்த சீரியல் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
3 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கும் இத்தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் சமீபத்தில் விருது கிடைத்துள்ளது.
தற்போது, இந்த காலத்தில் எதார்த்தமாக நடக்கும் ஒரு விஷயம் தொடர்பாக கதை சென்று கொண்டிருப்பதால், ரசிகர்கள் ஆர்வமாக பார்க்க தொடங்கியுள்ளனர்.
ஆரம்பத்தில் பிரியாமல் இருந்து வந்த அண்ணன் தம்பிகள் சமீப காலமாக பிரிந்து வெளியே சென்றனர். பின்பு மூர்த்தி கதிர் இருவரும் மட்டுமே ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
இதில் கண்ணன் ஐஸ்வர்யா தனியாக வீடு எடுத்து தேவையான பொருட்களை எல்லாம் கடனில் வாங்கிக்கொண்டு சிக்கித்தவித்து வருகின்றனர். மற்றொரு புறம் ஜீவா தனது மாமனார் வீட்டில் மனைவியுடன் வசித்து வருகின்றார்.
கண்ணன் மனைவி ஐஸ்வர்யாவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த ஆடம்பரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், கண்ணன் கிரெடிட் கார்டு மூலம் ஆடம்பரமாக செலவு செய்துவிட்டு இறுதியில் கடன் கட்டமுடியாமல் தவிக்கின்றார்.
இந்நிலையில் கடன்காரர்கள் வீட்டு வாசலில் சத்தம் போட்டதுடன், ஐஸ்வர்யாவின் கையை பிடித்து இழுக்க முயன்று சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் கண்ணன் குறித்த வங்கி ஊழியர்களால் தாக்கப்படுகின்றார்.
இதனை கேள்விப்பட்ட கதிர் கோபத்தில் பொங்கி எழுந்து குறித்த வங்கு ஊழியர்களை செம்மையாக தாக்கியுள்ளார்.