பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முளைத்த ரியல் காதல்: வெளியான புகைப்படத்தால் கேள்வியால் துளைக்கும் ரசிகர்கள்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனாக நடித்து வரும் அந்த சீரியலில் இதற்கு முன்பு ஐஸ்வர்யாவாக நடித்த நடிகையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தீயாய் பரவி வருகின்றது.
இந்த சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் பலர் மாறிய நிலையில் விஜே தீபிகா கச்சிதமாக பொருந்தி நடித்து வந்தார்.
ஆனால் அவரது முகத்தில் இருக்கும் முகப்பருக்கள் மறையவில்லை என்ற காரணத்திற்காக அவரை சீரியலில் இருந்து நீக்கியது பிரபல ரிவி. இதனால் தற்போது சாய் காயத்ரி அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கண்ணனுக்கு கொஞ்சம் கூட பொருத்தமில்லை என தற்போது வரை ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அதேசமயம் சரவண விக்ரமும் தீபிகாவும் தொடர்ந்து யூடியூப் சேனலில் ஒன்றாக இணைந்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இருவரும் நண்பர்கள் என கூறி வருகின்றனர். ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் இருவருக்கும் இடையே காதல் இருக்கிறது என்ற சந்தேகம் தொடர்ந்து இருந்து கொண்டுதான் வருகிறது.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து ஈஷா மையத்திற்கு சென்று தரிசனம் செய்துள்ளனர். அங்கே இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. தீபிகா தான் இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.