ஓ மூஞ்சிக்கு இந்த வாய்ப்பா? ஹேமாவை அசிங்கப்படுத்திய மேனேஜர்
“ ஓ மூஞ்சிக்கு இந்த வாய்ப்பு கிடைக்கிறதே பெரிய விஷயம்..” என அசிங்கப்படுத்திய மேனேஜருக்க சீரியல் நடிகை கொடுத்த பதில் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சீரியல் நடிகை ஹேமா
தற்போது வெள்ளித்திரை படங்களை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அந்த வகையில், பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியல் தன்னுடைய முதல் பாகத்தை சிறப்பாக நிறைவு செய்து விட்டு, இரண்டாம் பாகம் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. முதல் பாகத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக இருந்து பிரபலமாகிய ஹேமா, தற்போது இரண்டாம் பாகத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா என்றால் தெரியாதவர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள்.
ஹேமாவை அசிங்கப்படுத்திய மேனேஜர்
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் தன்னுடைய கடந்த காலம் பற்றி பகிர்ந்து கொண்ட ஹேமா அவரை அசிங்கப்படுத்திய சம்பவம் குறித்து பேசியிருந்தார்.
அதில், “நான் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது எனக்கு பட வாய்ப்பு ஒன்று வந்தது. இந்த வாய்ப்பை நான் சென்று உறுதிப்படுத்திக் கொண்டேன். ஆனால் அந்த மேனேஜர் என்னை மீண்டும் தொடர்புக் கொண்டார்.
அப்போது சம்பளம் குறித்து மீண்டும் என்னிடம் பேசினார். நான் அந்த சம்பளத்திற்கு என்னால் நடிக்க முடியாது என்றேன். உடனே அவர், ஓ மூஞ்சிக்கு நாங்கள் பட வாய்ப்பு கொடுக்கிறதே பெரிய விஷயம்..” என அசிங்கப்படுத்தினார். ஆனாலும் அந்த திரைப்படம் உருவாக்கம் பெறவில்லை. சில காரணங்களால் படம் தள்ளிப்போய் விட்டது..” என கூறியுள்ளார்.
இந்த காணொளி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
