குடும்பத்துடன் புது வீட்டிற்கு குடிபுகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்: களைக்கட்டும் புதுமனை புகுவிழா
பாண்டியன் ஸ்டோர்ஸ் இல் இவ்வளவு நாளாக சோகமாக இழுத்துக் கொண்டிருந்து தற்போது குதூகலத்திற்கு மாறியதை ப்ரோமோவாக வெளியாகியிக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
குடும்ப ஒற்றுமையையும் அண்ணன் தம்பிகளின் பாசப் பிணைப்பையும் பறைசாற்றும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் இரவு 8.30 மணிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்.
இந்த நான்கு அண்ணன் தம்பிகளும் திருமணம் முடித்து ஒன்றாக ஒரே வீட்டில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் வாழ்வார்களா இல்லையா? என்பது தான் தொடரின் கதையாக தற்போது நகர்ந்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், தனத்திற்கு மார்பக புற்று நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. சில காலமாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி வந்த தனம் இந்த உண்மையை வீட்டில் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்து இறுதியில் அறுவை சிகிச்சையும் செய்து முடித்திருக்கிறார்கள்.
புதுமனை புகுவிழா கொண்டாட்டம்
அந்தவகையில் இன்றைய ப்ரோமோ காட்சியில், இவ்வளவு நாட்களாக சோகமாக கொண்டு வந்தது போது என சந்தோசத்திற்கு மாற்றி இருக்கிறார்கள்.
அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்த்து கட்டி முடித்த புதிய வீட்டிற்கு கிரஹப்பிரவேசம் செய்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் அந்த வீட்டிற்கு தனலட்சுமி இல்லம் என்று பெயர் பலகையும் வைத்திருக்கிறார்கள். இதனால் தனமும் அவரது குடும்பத்தும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |