சின்னத்திரையில் 14 ஆண்டுகளை கடந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தனமா இது? குழந்தையுடன் குழந்தையாக மாறிய வைரல் காட்சி
சின்னத்திரையில் 14 ஆண்டுகளை கடந்து வெற்றி பயணத்தில் இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் உண்மையில் பலருக்கும் ஒரு ரோல்மாடல்.
குழந்தை நட்சத்திரமாக 2 வயதில் திரையுலகத்திற்கு வந்த அவர் 30 ஆண்டுகளை கடந்துள்ளார்.
சின்னத்திரையில் மட்டுமே 14 ஆண்டுகளுக்கு மேலாக அவரின் பயணம் தொடர்கிறது. பாக்யராஜ் மற்றும் ஊர்வசி நடித்த முந்தானை முடிச்சு படத்தில் இருக்கும் குழந்தை நட்சத்திரம் இவர் தான்.
இதுப்போன்ற பல படங்கள் சத்யாரஜ் மகளாக, கார்த்திக் மகளாக பல படங்களில் நடித்துள்ளார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனமாக ரசிகர்கள் இல்லங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
அவர் சமூகவலைத்தளங்களிலும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார். அண்மையில் குழந்தையை கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.