Pandian Stores 2: தங்கையின் வீட்டுக்கு விருந்திற்கு வந்த அண்ணன்கள்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் கோமதி
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கோமதியின் அண்ணன்கள் தாயின் வற்புறுத்தல் காரணமாக கோமதியின் வீட்டிற்கு விருந்துக்கு வந்துள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றது. பாண்டியன் குடும்பம் காதல் திருமணத்தினால் 30 ஆண்டுகளாக பிரிந்துள்ளது.
தங்கையையும், அவரது குடும்பத்தையும் எதிரியாக நினைத்து பல இடையூறுகளை செய்த அண்ணன்கள் தங்கைக்காக காவல்நிலையம் ஏறியதுடன், நீதிமன்றத்திலும் சாட்சி கூறி தங்கை குடும்பத்தை வெளியே கொண்டு வந்தனர்.

ஆனால் சரவணன் மயிலுடன் வாழாமல் பிரிந்துள்ள நிலையில், தனது பிரச்சனைக்கு வந்து நின்ற அண்ணன்களை வீட்டிற்கு சாப்பிட அழைப்பதற்கு ராஜீ, கோமதி அங்கு சென்றுள்ளனர்.
அதற்கு அவர்கள் சத்தம் போட்டு அனுப்பிவிட்ட நிலையில், கோமதியின் தாய் வற்புறுத்தியதால் அண்ணன்கள் கோமதியின் வீட்டிற்கு சாப்பிட வருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அண்ணன்களை தனது வீட்டின் முன்பு பார்த்த கோமதிக்கு உச்சக்கட்ட மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் அண்ணன்களுக்காக விதவிதமாக சாப்பாடும் செய்து வைத்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |