சிறையில் கண்ணன்! பிரசவ வலியால் துடித்த ஐஸ்வர்யா... பரபரப்பின் மத்தியில் பிறந்த புதிய வாரிசு
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஐஸ்வர்யாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
அண்ணன் - தம்பி பாசம், கூட்டு குடும்பம் என வாழ்க்கையை எடுத்துக்காட்டாக காட்டும் இந்த சீரியல் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
3 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கும் இத்தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் சமீபத்தில் விருது கிடைத்துள்ளது.
தற்போது, இந்த காலத்தில் எதார்த்தமாக நடக்கும் ஒரு விஷயம் தொடர்பாக கதை சென்று கொண்டிருப்பதால், ரசிகர்கள் ஆர்வமாக பார்க்க தொடங்கியுள்ளனர்.
ஆரம்பத்தில் பிரியாமல் இருந்து வந்த அண்ணன் தம்பிகள் சமீப காலமாக பிரிந்து மீண்டும் சேர்ந்துள்ளனர். ஜீவா மட்டும் தனது மாமனார் வீட்டில் இருந்து வருகின்றார்.
பிரசவ வலியில் ஐஸ்வர்யா
ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட கண்ணன் ஐஸ்வர்யா வெளியே கடன் வாங்கி மாட்டிக்கொண்டதுடன், தற்போது வங்கியில் லஞ்சம் வாங்கிக்கொண்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்ணனை வெளியே கொண்டு வரமுடியாது என்று தெரிந்த அதிர்ச்சியில் ஐஸ்வர்யாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
கண்ணன் இல்லாததால், ஐஸ்வர்யாவையும் குழந்தையையும் நன்றாக பார்த்துக்கொள்வதாக மூர்த்தி கூற, ஐஸ்வர்யாவும் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
மற்றொரு புறம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனம் என்ன செய்ய போகிறார்... அவரது நிலை என்ன என்பதை அதிகமாக மக்கள் சிந்தித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |