பாண்டியன் ஸ்டோர் முல்லை மீண்டும் மாற்றமா? புதிய வரவு இவரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்;
என்னதான் தொலைக்காட்சிகளில் பல சீரியல்களை ஒளிப்பரப்பி வந்தாலும் மக்கள் ஒரு சில சீரியல்களையே விரும்பி பார்க்கிறார்கள்.
அப்படிப்பட்ட சீரியல்களின் வரிசையில் டாப் இடத்தில் இருப்பது தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இந்த சீரியலின் பெயருக்காகவே இது மிகவும் பிரபலமான ஒன்றாக மாறி விட்டது.
அதேப்போல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. அந்த வகையில், இந்த சீரியலில் 'முல்லை' கதாபாத்திரத்தில் முதலில் வி.ஜே. சித்ரா முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
அவர் மறைந்த பின், காவ்யா அறிவுமணி என்பவர் இதற்கு தேர்வு செய்யப்பட்டு முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால், பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபத்திரத்தில் தற்போது நடித்து வரும் காவ்யா அறிவுமணி அதில் இருந்து விலக போவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியானது.
அவருக்கு, பதிலாக அபிநயா என்பவர் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க வந்துள்ளார் என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால், அது உண்மை இல்லை என்று தற்போது தெரிய வந்துள்ளது.
மேலும், இவரும் மாறிவிட்டால், சீரியல் பாலாய் போய்விடும் என்பதால், விடாபிடியாய் உள்ளார்களாம் சீரியல் குழுவினர்கள்.