கடைசியாக ஒருவழியா நிஜத்தில் அம்மாவை பார்த்த கண்ணன்: பரபரப்பான புகைப்படம்
சீரியலில் தனது இறந்து போன தாயின் முகத்தினை காணமுடியாமல் கதறிய கண்ணன் ரியலில் குறித்த நடிகையை நேரில் சென்று அவதானித்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ், பார்வையாளர்களால் அதிகம் பார்க்கப்படும் சென்சேஷ்னல் சீரியலாக தற்போது மாறியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் கேரக்டரில் நடித்து வரும் சரவணன் விக்ரம், ஐஸ்வர்யா கேரக்டரை திருமணம் செய்து கொண்டார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சகோதரர்களுக்கு அதிருப்தி ஏற்படவே, கண்ணன், ஐஸ்வர்யாவுடன் தனியாக வாழ்ந்து வந்தார்.
இதனிடையே ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்த விஜே தீபிகா மாற்றப்பட்டு சாய் காயத்ரி தற்போது நடித்து வருகிறார். முன்னதாக ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்த தீபிகாவுக்கு சாய் காயத்ரி வாழ்த்துக்களையும் தெரிவித்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த சீரியலில் தற்போது முக்கிய இழப்பு நடந்ததுள்ளது. ஆம், இந்த சீரியலில் மறைந்த பாண்டியனின் மனைவியும், பாண்டியன் ஸ்டோர் சகோதரர்களின் தாயாருமான லட்சுமி உயிரிழக்கிறார்.
இந்த காட்சிகளில் அனைவரும் அழும் காட்சிகள் அனைவரையும் உருக்கியது. தொடர்ந்து சில நாட்களாக இந்த சீரியலில் இந்த இறப்பு காட்சி குறித்தும், இந்த காட்சியின்போது நடிகர்களின் நடிப்பு குறித்தும் பேசி வருகின்றனர்.
இதனிடையே லட்சுமி அம்மா இறந்து போன பிறகு கடைசியாக தான் பார்க்க வருகிறார் கண்ணன். அவர் ஓடி வந்து அம்மாவின் இறப்பின் போது அழுது புரண்டு நடித்ததும், பிறகு மொட்டை அடித்ததும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பேசிய சரவணன், “எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இதற்கு முன்பாக சீரியலில் ஒரு இறப்பு காட்சியை இவ்வளவு லைவாக செய்து நான் பார்த்ததில்லை. நான் பெரும்பாலும் அந்த இடத்தில் இல்லை. என்னுடைய காட்சிகள் எல்லாம் தனியாக எடுக்கப்பட்டிருக்கும்.
இதில் அம்மாவாக நடித்திருந்த ஷீலா அம்மா தான் இந்த காட்சிகளைப் பொறுத்தவரை ஹீரோ என்று சொல்லலாம். அவருடைய ஒத்துழைப்பு தான் இந்த காட்சி அருமையாக வந்ததற்கு காரணம்.
வாயில் அரிசி, மூக்கில் பஞ்சு என அவரைப் பார்க்கும்போது மிகவும் பாவமாக இருந்தது. அவரை உண்மையிலேயே படுக்க வைத்து, மேலே சாணி வறட்டியை வைக்கும் காட்சி எடுக்கப்பட்டது.
இந்த வயதில் இவ்வளவு டெடிகேஷனாக இருக்கிறார். அவரைப் பார்க்கும்போது மிகவும் இன்ஸ்பிரேஷனாக இருந்தது. இந்த காட்சிகள் எடுக்கப்பட்ட விதம் இன்னும் மனதிற்குள்ளே இருக்கிறது. இன்னும் அதிலிருந்து வெளியே வரவில்லை” என்று பேசிக் கொண்டிருந்தவர்.
திடீரென நேர்காணல் அறைக்குள் நடிகை ஷீலா (லட்சுமி கேரக்டரில் நடித்தவர்) நுழைந்தவுடன் சர்ப்ரைஸ் ஆன சரவணன், ஒரு கணம் கண்ணனாக மாறி, அம்மா என்னம்மா என்று கேட்கிறார். உடனே ஷீலா “நான் போகும்போது கடைசிவரை உன்னை பார்க்காமல் போய்விட்டேனடா கண்ணா” என்று சொல்லி சிரிக்கிறார்.
உண்மையிலேயே கடைசி நாள் ஷூட்டிங்கின் போது கண்ணனாக நடிக்கும் சரவணன், லட்சுமியாக நடித்த ஷீலாவை பார்க்கவே இல்லை என்று அவர்கள் இருவரும் அங்கு பகிர்ந்து கொண்டனர்.
மேலும் இது குறித்து பேசிய சரவணன், இந்த காட்சிகளை வீட்டில் இருந்து பார்க்கும்போது மிகவும் அழுகை வந்ததாகவும், “அன்னைக்கு பார்க்க மிஸ் பண்ணிட்ட அம்மாவை இப்போதுதான் பார்க்கிறேன்” என்றும் தெரிவித்திருக்கிறார். இவர் சந்தித்த புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகின்றது.