பாண்டியன் ஸ்டோர் சீரியலிலிருந்து திடீரென வெளியேறிய நடிகை... அவரே வெளியிட்ட காணொளி
பிரபல ரிவியில் வித்தியாசமான கதைக்களத்துடன், அனைவருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ஒளிபரப்பாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற தொடர் பாண்டியன் ஸ்டோர். குடும்பக் கதையான இத்தொடர் இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் பெருமளவில் கவர்ந்துள்ளது.
அண்ணன் தம்பி பாசத்தினை மையமாக கொண்டுள்ள இந்த சீரியல் இல்லத்தரசிகளை மிகவும் அதிகமாக கவர்ந்துள்ளது. இதில் தனம் கதாபாத்திரத்தில் நடித்த சுஜிதாவின் அண்ணியின் அக்கா மகளாக ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடிகை வைஷாலி தனிகா நடித்து வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென சீரியலை விட்டு விலகியுள்ளார்.
இது குறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதிலளித்து வைஷாலி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர், அனைவரும் ஏன் பாண்டியன் ஸ்டோர் சீரியலை விட்டு விலகிவிட்டீர்கள் என்று கேட்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே எனக்கு அதற்கான காரணம் தெரியவில்லை. யாரும் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. இதற்கு மேல் அந்த காரணத்தை நான் தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை.