விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை: பரிதாப நிலையில் வெளியான புகைப்படம்
பாக்கியலட்சுமி சீரியல் நடிகையான கம்பம் மீனா விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.
கம்பம் மீனா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் செல்வி கதாபாத்திரத்தில் நடிகை கம்பம் மீனா நடித்து வருகின்றார்.
சில மாதங்களுக்கு முன்பு தனது அக்கா மகன் இறந்துபோனதை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட அவர், தற்போது கை எலும்பு உடைந்து கட்டு போட்டுள்ள புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியலில் மீனாவின் கதாபாத்திரம் மிகவும் அருமை என்று தான் கூற வேண்டும். இவர் சீரியல் மட்டுமின்றி சினிமாவிலும் நடித்துள்ளார்.
10ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே திருமணம் செய்து வைத்துள்ள நிலையில், இவருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளார்கள்.
குடும்ப சூழ்நிலை காரணமாக எல்ஐசி ஏஜெண்டாக வேலை செய்து வரும் இவர், பாரதி ராஜா இயக்கத்தில் தெக்கத்தி பொண்ணு என்ற சீரியலில் நடித்து பிரபலமானார்.
இந்த நிலையில் இன்று தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் நடிகை கம்பம் மீனா தனக்கு விபத்து ஏற்பட்டு விட்டது.
இதைப் பார்த்த ரசிகர்கள் தொடர்ச்சியாக கம்பம் மீனாவிற்கு ஆறுதல் கூறியும், அவர் சீக்கிரமாக பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |