கதிரிடம் சத்தியம் வாங்கிய ராஜு- மாமனாருக்கு பயந்து கொடுத்த வாக்கு- நடக்கப் போவது என்ன?
கதிர் மாமனாருக்கு பயந்து ராஜுயிடம் வாக்கு கொடுக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பிரபல தொலைக்காட்சியில் குடும்பங்கள் கொண்டாடும் சீரியல்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த 5 வருடங்களாக முதல் சீசன் வெற்றிகரமாக முடித்த இந்த சீரியல் தற்போது தன்னுடைய இரண்டாவது பாகத்தை துவங்கியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தில் நடித்த சில நடிகர்கள் நடிக்கிறார்கள்.
2ஆம் பாகத்தில் அப்பா-மகன்களின் பாசத்தை உணர்த்தும் வகையில் கதை நகர்ந்து கொண்டிருக்கின்றது.
சத்தியம் வாங்கிய ராஜு..
இந்த நிலையில் கதிர் அவருடைய அம்மாவுக்காக ராஜுவை திருமணம் செய்து கொண்டு அவருடைய தேவைக்காக மட்டுமல்ல நம்பி வந்த பொண்ணுக்காவும் கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறார்.
இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் கோமதியும் பல விதத்தில் புலம்பி விடுகிறார். அத்துடன் ராஜுவை திருமணம் செய்த பின்னர் தான் கதிர் இப்படி கஷ்டப்படுகிறார் என்பதனையும் அழுத்தமாக கூறி விடுகிறார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து வீட்டில் கொஞ்சம் வாய்தகராறு ஆகின்றது. இதனால் இந்த பிரச்சினைக்கு முடிவுக்கட்ட நினைத்த ராஜு, வகுப்பு செய்வதற்காக கதிரிடம் சத்தியம் வாங்கிக் கொள்கிறார்.
“ சத்தியம் செய்யாவிட்டால் ஏ அப்பா வீட்டிற்கு போய் விடுவேன்..” என மிரட்டலையும் இடையில் விடுகிறார்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |