நடுரோட்டில் இப்படியொரு சீரியல் காட்சியா... பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவில் பதிலால் முகம் சுளித்த ரசிகர்கள்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் ஹேமா சீரியல் முதலிரவு காட்சிகள் குறித்து பகிர்ந்துக் கொண்ட தகவல் தற்போது படும் வைரலாகி வருகின்றது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
மீனா குடும்ப ஒற்றுமையையும் அண்ணன் தம்பிகளின் பாசப் பிணைப்பையும் பறைசாற்றும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் இரவு 8.30 மணிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்.
இந்த சீரியலில் ஸ்டாலின் முத்து, வெங்கட் ரெங்கநாதன் மற்றும் குமரன், சுஜிதா ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் ஜீவாவின் மனைவி மீனாவாக, ஹேமா நடிக்கிறார்.
இவரின் இந்த கதாப்பாத்திரமும் நடிப்பும் அனைவருக்கும் பிடித்துப் போக இவருக்கென பல ரசிகர்கள் இவரைக் கொண்டாடி வருகிறார்கள்.
முகம் சுளிக்க வைத்த பதில்
இந்நிலையில், அண்மையில் நேர்காணல் ஒன்றில் மீனா பேசிய விடயங்கள் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. அவரிடம் சீரியல் குறித்தும் சீரியலில் இடம் பெறும் முதலிரவு காட்சிகள் குறித்தும் கேட்ட போது அவர் தனக்கு நடந்த ஒரு அனுபவத்தைப் பகிர்ந்துக் கொண்டார்.
அதில் சீரியலில் எடுக்கப்படும் முதலிரவு காட்சிகள் பற்றி மக்களுக்கு தெரியாது. அன்று முதலிரவு காட்சி எடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு அறையை எடுத்திருந்தார்கள் ஆனால் அந்த அறையில் வேறு ஏதோ ஒரு படத்திற்கு காட்சிகள் எடுக்கப்பட்டதால் வேறு வழியில்லாமல் நடு ரோட்டில் அறை போல செட்டு போட்டு அந்தக் காட்சிகளை எடுத்தார்கள் என கூறியிருக்கிறார்.
பிரசாந்த் கொடுத்த பொய் வாக்குமூலம்... உண்மை தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறிய மீனா.. பரபரப்பான ப்ரோமோ காட்சி
இவர் இதை சொன்னதும் பலரும் அதிர்ச்சியடைநதுள்ளனர். மேலும், இந்த அனுபவத்தை தன்னால் மறக்கவே முடியாது என்றும் கூறியிருக்கிறார். இவரின் இந்த பதிலுக்கு பலரும் பல முகம் சுளிக்கும் கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |