பிரபல இயக்குனரின் மனைவி தற்கொலை! பரிதாப நிலையில் 2 குழந்தைகள்
பிரபல சீரியல் இயக்குனரான ஓ.என்.ரத்தினத்தின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாண்டவர் இல்லம் இயக்குனர்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களான அழகு, வாணி ராணி, பாண்டவர் இல்லம், பிரியமான தோழி, செவ்வந்தி சீரியல்களை இயக்கி வருவபர் இயக்குனர் ஓ.என்.ரத்தினம்.
இவர் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர். இவரது மனைவி பிரியாவும் அதே ஊரைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகின்றது. காதலித்து குடும்பத்தினை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
தற்போது பள்ளி விடுமுறை என்பதால் இவர்களது பிள்ளைகள் பொள்ளாச்சியில் இருக்கும் தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளனர். இரண்டு வாரம் கழித்து இன்று ஊருக்கு திரும்பிய அவர்களை அழைத்து வர ரத்தினம் பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார்.
இதனிடையே ரத்தினம், பிரியா இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சினை இருந்து வந்ததாகவும் கூறப்படுகின்றது. இதனால் மனமுடைந்த பிரியா கணவர் பிள்ளைகளை அழைத்து வர சென்ற நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
பின்பு ரத்தினத்திற்கு தெரியவரவே அவரை மீட்டு மருத்துவமனைக்கு சென்ற நிலையில் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துள்ளது. தற்போது பிரேத பரிசோதனை செய்வதற்கு பிரியாவின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காதலித்து பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த பிரியா தற்போது சிறு பிரச்சினையால் இவ்வாறு பிள்ளைகளை விட்டுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.