இணையத்தில் பயங்கர ட்ரண்டாகும் பாண்டா கரடியின் காணொளி: இந்த நொடி மகிழ்ச்சியை எப்படி அனுபவிக்கிதுனு பாருங்க
பாண்டா கரடி ஒன்று நீரில் துள்ளிக் குதித்து ஆட்டம் போட்டுள்ள காணொளி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இந்திய வனத்துறை அதிகாரியான Susanta Nanda IFS தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது விலங்குகளின் வினோத காட்சியினை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் குட்டி பாண்டா ஒன்று நீர் நிரம்பிய சிறிய குட்டையில் ஆனந்தமாக துள்ளி விளையாடி குளியல் போட்ட காட்சியினை பதிவிட்டுள்ளார்.
குறித்த காணொளியுடன் அவர் எழுதிய வாசகம், இந்த நொடியில் மகிழ்ச்சியாக இருங்கள், அது போதும். ஒவ்வொரு கணமும் நமக்குத் தேவையானது தான் என குறிப்பிட்டுள்ளார். குறித்த காணொளி இணையத்தில் பயங்கர ட்ரண்டாகியுள்ளது.
Be happy in the moment, that’s enough.
— Susanta Nanda IFS (@susantananda3) November 6, 2021
Each moment is all we need, not more. pic.twitter.com/4sO0OHfqxB