கணைய புற்றுநோயை காட்டிக் கொடுக்கும் அறிகுறிகள்- உஷாராக இருங்கள்!
பொதுவாக மனித உடலில் செரிமானத்திற்கு உதவியாக இருக்கும் உறுப்பு தான் கணையம்.
இந்த பகுதி வயிற்றில் இரைப்பைக்கு பின்னால் அமைந்திருக்கும். நமது கையளவில் இருக்கும் இந்த உறுப்பில் இருந்து செரிமானத்தின் போது கணைய நீர் என்னும் நொதியம் உருவாகும்.
இந்த நொதிகள் நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரை, கொழுப்புக்கள், ஸ்டார்ச் போன்றவற்றை உடைக்கும் வேலையை செய்கிறது.
இவ்வளவு முக்கியம் வாய்ந்த கணையத்தில் புற்றுநோய் செல்கள் வளர்ந்தால் அதனை சில அறிகுறிகள் வைத்து தெரிந்து கொள்ளலாம்.
அந்த வகையில், கணைய புற்றுநோய் இருப்பதை உறுதிச் செய்யும் அறிகுறிகள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
ஆரம்ப கால அறிகுறிகள்
1. சிலருக்கு எந்தவித முயற்சியும் இல்லாமல் எடை குறையும். அப்படி எதுவும் நடந்தால் சந்தோஷமாக இருக்காமல் உடனடியாக உடை இழப்பிற்கான காரணத்தை தெரிந்து கொள்வது அவசியம். கணையத்தில் புற்றுநோய் இருந்தால், அது உடலின் ஜீரணிக்கும் திறனில் தாக்கம் செலுத்தும். அத்துடன் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சு கொள்ளும்.
2. கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், அடிக்கடி மேல் வயிறு மற்றும் முதுகு பகுதியில் வலியை சந்திப்பார்கள். இந்த வலியானது, ஒருவித வயிற்று அசௌகரியம் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். இந்த வலியானது மேல் வயிற்று பகுதியில் அடிக்கடி வரும்.
3. நீங்கள் சிறிது உணவை உட்கொண்டாலும், வயிறு நிரம்பியது போன்று உணர்ந்தாலும் இந்த புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். புற்றுநோய் கட்டிகள் கணையத்தில் அழுத்தம் கொடுத்து, செரிமான செயல்பாட்டை பாதிக்கும்.
4. சிலருக்கு வேலை செய்யாமல் உடல் சோர்வு ஏற்படும். இதற்கு புற்றுநோயின் அறிகுறிகள் முக்கிய காரணமாக இருக்கலாம். கணையத்தில் ஏதாவது பிரச்சினை வரும் பொழுது அது சோர்வை உண்டு பண்ணும்.
5. 50 வயது கடந்த ஒருவருக்கு சர்க்கரை வியாதி வந்தால் அதுவும் கணைய புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். ஏனெனின் இந்த புற்றுநோயின் தாக்கம் இன்சுலின் உற்பத்தி செய்யும் திறனை பாதிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |